Jump to content


Photo

அம்மா சமையல் [ மூக்கடலை குருமா & தக்காளி மிளகு ரசம் ]

அம்மா சமையல்

  • This topic is locked This topic is locked
No replies to this topic

#1 Mr.S

Mr.S
  • VIP
  • 495 posts

Posted 12 February 2019 - 10:11 AM

டேஸ்டியான மூக்கடலை குருமா:
 
தேவையான பொருட்கள்:
வெள்ளை மூக்கடலை  - 1/2 கப்
வெங்காயம் - 1
தனியா பொடி - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை -சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்
 
செய்முறை:
இரவு முழுவதும் மூக்கடலையை  தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
 
ஊற வைத்த மூக்கடலையை  தேவையான தண்ணீர் ஊற்றி  குக்கரில் போட்டு 1 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். குழையக் கூடாது
 
கடாயை தீயில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொறிக்க விடவும்.
அடுத்ததாக வெங்காயம் சேர்த்து அதோடு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
 
வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் அதோடு தனியா பொடி, சீரகப் பொடி, மஞ்சள் சேர்த்து வதக்கவும்.
 
பொடிகளின் பச்சை வாசனை போனதும், வேக வைத்த மூக்கடலையைச் சேர்க்கவும். குக்கரில் வேக வைத்த நீர் இருந்தாலும் அதையும் சேர்த்து ஊற்ற வேண்டும்.
 
தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
 
சுவையான மூக்கடலை  குருமா ரெடி. இது சப்பாத்தி, இட்லி, தோசைக்கு சுவையாக இருக்கும்.
 
dd9fdf8d9a8fa58499aa22a841440180.jpg
 
=========================
 
தக்காளி மிளகு ரசம்
 
செ.தே.பொ :-
 
நற்சீரகம் - 1 மே.கரண்டி
மிளகு - 1 தே.கரண்டி
கொத்தமல்லி - 1 தே.கரண்டி
தக்காளி - பெரிது 1 (நறுக்கி)
கறிவேப்பிலை - 1 நெட்டு
கடுகு - 1/2 தே.கரண்டி
பெருஞ்சீரகம் - 1தே.கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
உள்ளி - 3 பல்லு (நசுக்கி)
உப்பு - தேவையான அளவு
செ.மிளகாய் - 1 (3 துண்டாக்கி )
பழப்புளி - 1 பாக்களவு
தண்ணீர் -2 கப்
எண்ணெய் - 1 தே.கரண்டி
 
செய்முறை :
 
தண்ணீரில் புளியைக் கரைத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.
 
மிளகு, நற்சீரகம், கொத்தமல்லி ஆகியவற்றை பவுடராக இடித்து எடுத்துக் கொள்ளவும்.
 
அடுப்பில் சட்டியை வைத்து, சூடானதும் எண்ணெய் விட்டு, கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை ,உள்ளி ஆகியவற்றை போட்டு சூடாக்கவும்.
 
கடுகு வெடித்ததும், செ.மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், இடித்து வைத்த கலவை போட்டு தாளிக்கவும்.
 
தக்காளி அவிந்து திரளும் போது புளிக்கரைசலையும் விட்டு, தேவையான அளவு உப்பு போட்டு ஒரு கொத்தி வந்ததும் இறக்கவும்.
 
தக்காளி கூடுதலாக விரும்பின் சேர்க்கலாம்.இந்த ரசம் உண்மையிலே சூப்பரான ருசி ... நிச்சயம் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கோ .........
 
8500b86b541bfc23be54f35513bf6a1e.jpg

  • Gunasegaran likes this